திருப்பூரில் வக்கீல்களுக்கான விளையாட்டு போட்டி


திருப்பூரில் வக்கீல்களுக்கான விளையாட்டு போட்டி
x
திருப்பூர்

திருப்பூரில் வக்கீல்களுக்கான

விளையாட்டு போட்டிதிருப்பூரில் வக்கீல்களுக்கான

விளையாட்டு போட்டி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 தினங்களாக ஆண் வக்கீல்களுக்கான கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதன் இறுதி போட்டி நேற்று நடந்தது. இதேபோல், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை பெண் வக்கீல்களுக்கான கபடி, கைப்பந்து, கையுந்து பந்து, ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகள் நடந்தன. அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் அதிக அளவிலான பெண் வக்கீல்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடினர்.

இதேபோல் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) வரை ஒவ்வொரு நாளும் ஆண் மற்றும் பெண் வக்கீல்களுக்கான சதுரங்கம், செஸ், இறகுபந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றது. 12-ந்தேதி (வியாழக்கிழமை)் உறியடித்தல், கோலப்போட்டி, லக்கி கார்னர் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. அதை தொடர்ந்து நடக்கும் பரிசளிப்பு விழாவில் இதுவரை நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.


Next Story