தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை


தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
x

தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

திருச்சி

திருச்சியில் மாணவ-மாணவிகள் தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைக்கும் நிகழ்ச்சி தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. டி.என்.ஜெ. சிலம்ப குழுவை சேர்ந்த மாணவ-மாணவிகளின் இந்த சாதனை நிகழ்ச்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜெய்சுபா, ரிபாயா, அஞ்சனா, வேல்முருகன், விஸ்வநாத், சரவணேஷ், சிவகிஷோர், குகன், பிரதிஷா, தர்ஷன்குமார் ஆகிய 10 மாணவ-மாணவிகள் இந்த சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இவர்களின் இந்த சாதனை லிங்கன் புக் ஆப் ரெக்காட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சாதனை படைத்தவர்களுக்கு சிலம்ப ஆசான் தங்கராஜ் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.


Related Tags :
Next Story