தஞ்சை பெரியகோவில் கோட்டைச்சுவரில் விளம்பரம் செய்ய தடை


தஞ்சை பெரியகோவில் கோட்டைச்சுவரில் விளம்பரம் செய்ய தடை
x

தஞ்சை பெரியகோவில் கோட்டைச்சுவரில் விளம்பரம் செய்ய தடை

தஞ்சாவூர்

தஞ்சை பெரியகோவில் கோட்டைச்சுவர் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் என்பதால் அதில் விளம்பரம் செய்ய தொல்லியல் துறை தடை விதித்துள்ளது.

தஞ்சை பெரியகோவில்

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கி.பி.1010-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1010 ஆண்டுகளை கடந்தும் இன்னும் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவிலை சுற்றிலும் பெரிய கோட்டைச்சுவர் உள்ளது. அதன் உள்ளே சின்ன கோட்டைச்சுவரும் உள்ளது.

விளம்பரங்கள் செய்ய தடை

இந்த கோட்டைச்சுவர் தஞ்சை பெரிய கோவில் முன்புறம் உள்ள மராட்டா நுழைவு வாயிலில் இருந்து தொடங்கி கோவிலை சுற்றி வந்து மீண்டும் மராட்டா நுழைவு வாயிலை அடைகிறது.

இந்த கோட்டைச்சுவரில் பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டுவது, விளம்பர பேனர்கள் கட்டி தொங்க விடுவது போன்ற செயல்களை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த கோட்டைச்சுவரில் விளம்பரங்கள் தடை செய்து தொல்லியல்துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம். இதில் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு பலகைககள் வைத்துள்ளனர். தஞ்சை திலகர் திடல் அருகே இருந்து அகழி வரை உள்ள கோட்டை சுவரில் இந்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.


Next Story