ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆலோசனை


ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 11 Aug 2023 12:45 AM IST (Updated: 11 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆலோசனை நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை நகர பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பிளாஸ்டிக் இல்லா நகரம் ஆகியவை தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு நகர சபை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமைப்பு அலுவலர் காஜாமுகைதீன் வரவேற்றார். நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன் ஆக்கிரமிப்புகள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றுதல் குறித்து விளக்கம் அளித்தார். துப்புரவு ஆய்வாளர் சேகர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கி பேசினார். இதில் வர்த்தக சங்கத்தினர், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story