நரிக்குறவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தல்
செங்கனாவரத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த செங்கனாவரம் கிராமத்தில் நரிக்குறவர்கள் 35 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். புயல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தி உள்ளார். அதன்பேரில் கலவை தாசில்தார் மதிவாணன் தலைமையில், செங்கனாவரத்தில் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று மண் மற்றும் குடிசை வீட்டில் இருப்பவர்களை, அருகில் உள்ள அங்கன்வாடி, ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்று தங்குமாறும், மழை பெய்யும் போது, காற்று அடிக்கும் போது வீட்டில் யாரும் இருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். துணை தாசில்தார் தேவராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெகநாதன், கிராம நிர்வாக அதிகாரி கதிர்வாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story