ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

தஞ்சை மாநகரை அழகுபடுத்தும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாநகரை அழகுபடுத்துவது தொடர்பாக மேம்பாட்டு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தஞ்சை மாநகருக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதால் தஞ்சை மாநகரை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தி புதிய பொலிவை ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு துறைகளின் வல்லுனர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், கலைத்துறை வல்லுனர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி செயற்பொறியாளர் (பொறுப்பு) ராஜசேகரன் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story