ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

மயிலாடுதுறை நகராட்சியில் ஆலோசனை கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களினால் ஏற்படும் கட்டுமான கழிவுகளை அப்புறப்படுத்துவது மற்றும் மேலாண்மை செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமையில் நடந்தது. நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன், நகர்நல அலுவலர் லட்சுமிநாராயணன், நகரமைப்பு ஆய்வாளர் நேதாஜிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்டுமான கழிவுகளை சேகரிக்க நகராட்சிக்கு சொந்தமான தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள வண்டிப்பேட்டை என்ற இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த இடத்தில் கட்டுமான கழிவுகளை சேகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்களின் கழிவுகளை மேலாண்மை செய்வது குறித்து அதற்கான படங்களுடன் கூடிய தகவல்கள் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அனுமதி பெற்ற கட்டிட பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.


Next Story