நகரின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம்
நகரின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற அரங்கில் நகரின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு உறுப்பினர் கே.எஸ்.நாராயணன், உதவி பொறியாளர் அன்பு செழியன், துப்புரவு ஆய்வாளர் அபூபக்கர் விளக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் திருப்பத்தூர் பேரூராட்சி உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் நகர செயலாளர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள், திட்ட பணிகளை திறம்பட மேற்கொள்ளும் பொருட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆலோசனை வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகள் வளர்ப்பு, நமக்கு நாமே திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.