பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்


பகுஜன் சமாஜ் கட்சியின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் தாஸ், மாநில செயலாளர் ஸ்டீபன்ராஜ், கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் மாவட்ட தலைவர்கள் கோவிந்தசாமி, சிவபஞ்சவர்ணம், விநாயகமூர்த்தி, தணிகைசெல்வம், அய்யாசாமி, ஜீவன்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சண்முகம், சுபாஷ்னன், துரை, சிவபெருமான் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தேசிய தலைவர் மாயாவதியின் பிறந்த நாளை முன்னிட்டு 50 ஆயிரம் இளைஞர்களை கொண்டு விழுப்புரம் அல்லது கடலூர் மாவட்டத்தில் மையமாக கொண்டு மாவட்ட மாநாடு நடத்துவது, மாவட்டங்களில் உள்ள தொகுதி வாரியாக 5 ஆயிரம் இளைஞர்களை உருவாக்க மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்களுக்கு கூட்டம் வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.


Next Story