ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

ஆலோசனை கூட்டம்

சிவகங்கை


கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை வியானி அருட்பணி மையத்தில் தென்மண்டல செயலாளர் டேவிட் சாலமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக ஜான் பிரிட்டோ, செயலாளராக மிக்கேல் பிரபாகர், பொருளாளராக சூசைமாணிக்கம், துணைத் தலைவராக கிறிஸ்டோபர், அமிர்தராஜ் இளைஞரணி செயலாளராக மிக்கேல் சபர்ச்சம் மற்றம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் நடந்த மூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிறுபான்மையினருக்கு வருகின்ற பிரச்சினைகளை சீரிய வழியில் தீர்த்து வைத்து வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்க எடுப்பது என்றும், இயக்கத்தின் ஆண்டு விழாவையும் கிறிஸ்துமஸ் விழாவையும் கொண்டாட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஆல்பர்ட்ராஜ் நன்றி கூறினார்.


Next Story