ஆலோசனை கூட்டம் நடைபெற்றது


ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:46 PM GMT)

ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

சிவகங்கை

காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை வளாக கூட்டரங்கில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ தலைமை தாங்கினார். பள்ளித் துணை ஆய்வாளர்கள் ஸ்டீபன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றினார். பள்ளி துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் பள்ளிகள், வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார். எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகமத்நிஷா கருத்துரை வழங்கினார். பள்ளித் துணை ஆய்வாளர் ஸ்டீபன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ ஆகியோர் விளக்கவுரையாற்றினார். முடிவில் ஸ்டெம் கருத்தாளர் லலிதா நன்றி கூறினார்.


Next Story