ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலோசனை கூட்டம்

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி திருமேனிநாதர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சுழி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையில் திருச்சுழி பஜார் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறுவதால் வியாபாரிகள் கலர்பொடிகள் யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது.

முக்கியமாக இளைஞர்களுக்கு கலர்பொடிகள் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும் பஜார் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், குற்ற பிரிவு அலுவலர் பாலசுப்பிரமணியம், சுரேஷ் மற்றும் திருச்சுழி பஜார் வியாபாரிகள் கலந்தும் கொண்டனர்.


Next Story