ராணுவ வீரர்கள் சங்க ஆலோசனை கூட்டம்


ராணுவ வீரர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராணுவ வீரர்கள் சங்க சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் சரவண பொய்கை ஊருணியில் அமைந்துள்ள முன்னாள் ராணுவ வீரர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சங்க தலைவர் கேப்டன் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் வேலு, பொருளாளர் ஏனாதி துரைசாமி, நிர்வாகிகள் சுபேதார், ராமையா, கேப்டன் கேசவன், வில்வ லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேப்டன் செந்தூர்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதன்படி தலைவராக கேப்டன் கண்ணன் செயலாளராகவும், அவில்தார் வேலு பொருளாளராகவும், சுபேதர் மேஜர் துரைசாமி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story