தி.மு.க. ஆலோசனை கூட்டம்


தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

தமிழக முதல்-அமைச்சரும். தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலையொட்டி கட்சியில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கவும், இப்போதே பூத் வாரியாக கமிட்டி அமைத்து தேர்தல் பணிகளை தொடங்கவும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் வடக்கு நகர் தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கினார். இதில் நகர் தி.மு.க. நிர்வாகிகள், கவுன்சிலர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏராளமான இளைஞர்கள் உறுப்பினராக கட்சியில் சேர்ந்தனர்.


Next Story