குடிநீர் வினியோகம் குறித்து ஊராட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம்


குடிநீர் வினியோகம் குறித்து ஊராட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வினியோகம் குறித்து ஊராட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 யூனியனிலும் குடிநீர் தடையின்றி வழங்குவது குறித்து ஒவ்வொரு யூனியன் வாரியாக ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்படி இன்று கமுதி யூனியனில், வளையபூக்குளம் கிராம சமுதாய கூடத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. வருகின்ற வறட்சி காலத்தை கருத்தில் கொண்டு குடிதண்ணீர் தடையின்றி பொதுமக்களுக்கு கிடைத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் நிலத்தடிநீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் அகற்றுதல், குடிநீர் வினியோகிக்கும் முறைகள், காவிரி குடிநீர், உள்ளூர் குடிநீர் ஆதாரம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தனியார் டேங்கர்கள் மூலம் குடிநீர் வினியோகம் ஆகியவை குறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிப்பதை உறுதிப்படுத்தப்படும். எனவே மக்கள் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story