திருவாடானையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்


திருவாடானையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானையில் அ.தி.மு.க. சார்பில் இளைஞர், இளம்பெண் பாசறை, மகளிர் அணி மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இரட்டை அரு.பங்களாவில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆணிமுத்து, ஒன்றிய செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தனர். அனைவரையும் திருவாடானை நகர செயலாளர் ஜெய் ஸ்ரீராம் ராமநாதன் வரவேற்றார். கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பூத் கமிட்டி அமைத்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பவுல் மெல்கியூர், ஒன்றிய இளைஞர் இளம் பெண் பாசறை செயலாளர் ராம்குமார், கிளை செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், தொண்டி பேரூராட்சி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி, நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story