ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்


ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி ஊராட்சி ஒன்றிய வளைய பூக்களம் ஊராட்சியில் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 53 ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், மாவட்டத்தில் முழுமையான அளவு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வறட்சியான பகுதிகளுக்கு சென்று அப்பகுதி பொதுமக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2054-ம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கும் வகையில் பணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பணியை 2024்-ம் ஆண்டுக்குள் முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவரும் தங்கள் பகுதிக்கு எந்த அளவிற்கு தண்ணீர் கிடைக்க பெறுகின்றன, எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதை திட்டமிட்டு ஆய்வு செய்து அலுவலர்கள் வருகையின்போது தெரிவித்து ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதில், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் நாராயண சர்மா, நீர்வள ஆதாரத்துறை முதன்மை அலுவலர் நந்தகுமார், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சண்முகநாதன், மாவட்ட கவுன்சிலர் வாசுதேவன், கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பரமசிவம், நீர்வள ஆதாரத்துறை விஞ்ஞானிகள் ஜோதிலிங்கம், சரவணன், விஜய சாகர், கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமேகலை, சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story