ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு ஒன்றிய தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகள் அடங்கிய அரசாணையை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வருகிற 15-ந் தேதியன்று சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் வத்திராயிருப்பு ஒன்றிய சங்கத்தின் சார்பாக திரளாக கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணன் வரவேற்றார். ஒன்றிய தலைவர் பொம்மு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன் சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஒன்றிய துணைத்தலைவர் சுப்புராஜ் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் பாண்டியராஜன் செய்திருந்தார்.


Next Story