தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனை கூட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனை கூட்டம்
x

தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தத்தனூரில் அரியலூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வருகிற 18-ந் தேதி முள்ளி வாய்க்கால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பழ.ராஜா தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் சாமிநாதன், தலைமை நிலைய பேச்சாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய தலைவர் மணி பிரபாகரன் நன்றி கூறினார்.


Next Story