ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேனி
தேனி மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், அடுத்த ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் நடக்கும் சர்வதேச திறன் போட்டியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்களை பங்கேற்கச் செய்யும் வகையில் மாவட்ட அளவிலான போட்டிகளை திறம்பட நடத்துவது என்றும், அதுகுறித்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் ஆலோசனைகள் நடத்தி பல்வேறு அறிவுரைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட திறன் பயிற்சி மைய உதவி இயக்குனர் சதீஷ்குமார் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story