விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம்


விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம்
x

காபி வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

குன்னூர் காபி வாரியம் சார்பில், காபி விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் செம்மனாரை கிராம சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் காபி வாரிய துணை இயக்குனர் டாக்டர் கருத்தமணி, இளநிலை தொடர்பு அலுவலர் நித்யா மற்றும் அலுவலர்கள் ரஞ்சித், மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு, காபி செடிகள் நடவு முறைகள், காபி நர்சரி அமைப்பது குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் காபி செடிகளை தாக்கும் நோய்களான தண்டு துளைப்பான், இலை துளைப்பான் குறித்தும், நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், காபி செடிகளுக்கு இயற்கை உரம் இடுதல், உரங்களின் அளவு, காபி செடிகள் கவாத்து செய்தல் குறித்தும் அறிவுைரகள் வழங்கப்பட்டது. காபி விதை நர்சரி அமைப்பது மற்றும் காபி வாரியத்தில் இருந்து விதைகளை பெற வருகிற அக்டோபர் மாதம் விவசாயிகள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட காபி விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story