ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனை கூட்டம்


ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x

கே.வி.குப்பம்வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.மனோகரன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தஜோதிலட்சுமி, ஆனந்தி, நந்தகோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழைய வீடுகள், தொகுப்பு வீடுகள் கணக்கெடுத்தல், ஆதார் எண் இணைப்பு, மின் கட்டணம், நூலகவரி, குழு காப்பீடு உள்ளிட்ட பாக்கிகள் வசூலித்தல், நிலுவையில் உள்ள பணிகளை நேரடியாகச் சென்று சம்பந்தப்பட்டவர்களை அணுகி, விரைந்து முடித்தல் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


Next Story