வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
திருப்பூர்
தமிழகத்தில் வக்கீல்களுக்கும், வழக்காடிகளுக்கும் உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வலியுறுத்தியும், வக்கீல்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும், வக்கீல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்தக்கோரியும், தமிழக அரசு வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக நிறைவேற்றி அமல்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பார் அசோசியேசன், திருப்பூர் அட்வகேட் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வக்கீல் சங்கம் ஆகிய 3 சங்கங்களை சேர்ந்த வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிக்கு செல்லவில்லை. இதனால் கோர்ட்டு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர்.
----