வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
கோவில்பட்டியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (வயது 33). வக்கீல். இவர் சென்னை பெருங்குடி ராஜூ நகரில் குடியிருந்து கொண்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 25-ந்தேதி இரவு தனது வீட்டின் அருகில் மர்மக்கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
வக்கீல் ஜெய்கணேஷ் படுகொலையை கண்டித்து தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் கோர்ட்டுகளில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவில்பட்டியில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டுகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், வக்கீல்கள் இன்றும்(புதன்கிழமை) கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story