வக்கீல்கள் அனைத்து துறைகளிலும் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் பேச்சு


வக்கீல்கள் அனைத்து துறைகளிலும்  திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் பேச்சு
x

வக்கீல்கள் அனைத்து துறைகளிலும் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேசினார்.

திருச்சி

வக்கீல்கள் அனைத்து துறைகளிலும் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேசினார்.

பட்டமளிப்பு விழா

திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 2-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி 440 இளங்கலை மற்றும் முதுகலை முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது, சட்டக் கல்வியை கற்பவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதோடு இந்த சமூகத்தையும் மேம்படுத்த முடியும். ஒட்டுமொத்த பொதுமக்களின் உயர்வுதான் நாட்டின் உயர்வு. சட்ட கல்வி பயில்பவர்களுக்கு, தற்போது வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன என்றார்.

தனித்திறமைகள்

தொடர்ந்து மாலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டு 570 இளங்கலை மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது, நீங்கள் இப்போது வக்கீல்கள் சமூகத்தில் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்க வேண்டும். அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும். உங்களது பேச்சு, நடை, உடை, அனைத்தும் வேறுபட்டு இருக்க வேண்டும், மேலும் அனைத்து துறைகளிலும் உங்களது தனி திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். கோர்ட்டில் நீங்கள் தான் முதல் நபர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், நாமக்கல் சட்ட கல்லூரி முதல்வருமான அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி சட்டக்கல்லூரி இணை பேராசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.


Next Story