வக்கீல்கள் 'திடீர்' சாலை மறியல்


வக்கீல்கள் திடீர் சாலை மறியல்
x

போளூரில் வக்கீல்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள முருகபாடி கூட்ரோட்டில் போளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு பஸ்கள் நின்று செல்வதில்லை என தெரிகிறது. இதுபற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் போளூர் நீதிமன்ற வக்கீல்கள் அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து வக்கீல்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் வேலூர்-திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story