தொலைநோக்கி மூலம் வான்நோக்கல் நிகழ்ச்சி


தொலைநோக்கி மூலம் வான்நோக்கல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொலைநோக்கி மூலம் வான்நோக்கல் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,

மாவட்டத்தில் 6 இடங்களில் தொலைநோக்கி மூலம் வான்நோக்கல் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்பு நாள்

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- உலகை மாற்றிய புரட்சிகரமான வானவியல் கண்டுபிடிப்பை வானவியல் அறிஞர் கலிலியோ கலிலி நிகழ்த்திய நாளாக கடந்த கி.பி.1610-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதியாக கருதப்படுகிறது. அன்றுதான் கலிலியோ கலிலி தாமே வடிவமைத்த எளிய தொலைநோக்கி மூலம் வானில் தெரிந்த வியாழன் கோளை உற்று நோக்கி அதனை சுற்றி 4 ஒளி புள்ளிகள் சுற்றி வருவதை கண்டு அவை நட்சத்திரங்கள் என நினைத்தார்.

ஆனாலும் தொடர்ந்து தினமும் அவற்றை கவனித்தபோது அந்த 4 ஒளிப்புள்ளிகளும் ஒரே நேர்கோட்டில் வியாழன் கோளை சுற்றி வருவதை கண்டார். அந்த கண்டுபிடிப்புக்கு முன்புவரை பூமிதான் இந்த பிரபஞ்சத்தின் மையம் என்றும், சூரியன், நிலா, கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எல்லாமே பூமியைத்தான் சுற்றி வருகிறது என்று உலகமே நம்பிக் கொண்டிருந்தது. ஆனால் கலிலியோவின் இந்த கண்டுபிடிப்புக்கு பின்னர் தான் கோபர் நிக்கஸின் புவி மைய கோட்பாட்டை உலகம் ஏற்றுக்கொள்ள தொடங்கி அதன் பின்னர் வானவியலாளர்கள் இந்த 4 நிலாக்களையும் கலிலியன் நிலாக்கள் என்று பெயரிட்டனர்.

வான்நோக்கல் நிகழ்ச்சி

இந்த நான்கு நிலவுகள் ஐ.ஓ, ஐரோப்பா, கனிமீடு, காலிஸ்டோ ஆகும். இவை ஏறத்தாழ புவியின் துணைக்கோள். நிலாவின் அளவை ஒத்துள்ளன. வியாழன் கோளுக்கு 66 நிலாக்கள் உறுதிப்படுத்தப்பட்டு இவற்றில் 46 நிலாக்கள் 3 கிலோ மீட்டர் அகலத்திற்கும் குறைவானவை. இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்ட நாளான இன்று வியாழன் கோளையும், அதன் நிலாக்களையும் கண்டு மகிழும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு தொலைநோக்கி மூலம் வான்நோக்கல் நிகழ்ச்சியை காண மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை காளையார்கோவில், சிவகங்கை, திருப்புவனம், காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் கண்டுகளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story