கொரோனாவால் பாதிக்கப்பட்ட 82 பேருக்கு சிகிச்சை


கொரோனாவால் பாதிக்கப்பட்ட   82 பேருக்கு சிகிச்சை
x

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 82 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னர் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை உருவானது. ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 82 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் முககவசம் அணிய வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.


Next Story