போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்த தொழிலாளி சாவு
மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கடையம்:
கடையம் கர்ணன் தெருவைச் சேர்ந்தவர் சிவகாமியம்மாள் (வயது 87). கடையம் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரமு என்ற பிரம்மன் (65). தொழிலாளியான இவா் சிவகாமியம்மாளுக்கு உதவியாக இருந்து வந்தார். இதற்காக அவருக்கு அவ்வப்போது சிவகாமியம்மாள் பணம் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி சிவகாமியம்மாளிடம் பிரம்மன் பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரம்மன், சிவகாமியம்மாளை தள்ளிவிட்டு அவர் அணிந்து இருந்த நகைகளை பறித்துச் சென்றார்.
இதுகுறித்து சிவகாமியம்மாள் மகன் மாடசாமி கடையம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்து அன்றைய தினமே பிரம்மன் விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ேசர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரம்மன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.