1½ மாதங்களுக்கு பிறகுபுதிதாக ஒருவருக்கு கொரோனா
1½ மாதங்களுக்கு பிறகு கடலூாில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று புதிதாக பாதிக்கப்படாமல் இருந்து வந்தது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 76 ஆயிரத்து 16 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 17 ஆக உயர்ந்தது. அதாவது, கடந்த 1½ மாதங்களுக்கு பிறகு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 75 ஆயிரத்து 120 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது வரை 896 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story