29 ஆண்டுகளுக்கு பிறகு கந்திலி ஏரி நிரம்பியது


29 ஆண்டுகளுக்கு பிறகு கந்திலி ஏரி நிரம்பியது
x

29 ஆண்டுகளுக்கு பிறகு கந்திலி ஏரி நிரம்பியது. பொதுமக்கள் ஆடு வெட்டி பூஜை செய்தனர்.

திருப்பத்தூர்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மழை தொடர்ந்து பெய்து வருவதால் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், நிரம்பி வருகிறது.

திருப்பத்தூர் அருகே உள்ள கந்திலி ஊராட்சி ஒன்றிய கந்திலி ஏரி 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கடந்த 29 ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்தது. கடந்த முறை பெய்த மழையில் கூட ஏரி நிரம்பவில்லை. தற்போது பெய்த மழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உபரி வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பிரபு தலைமையில் ஏரியில் பூஜை செய்து, மலர் தூவி ஆடு வெட்டி பிரியாணி சமைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் ஜெகதீசன், நாட்டாமை பெருமாள், துணைத்தலைவர் உஸ்மான் மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர்.


Next Story