"வீட்டை சூறையாடிவிட்டு ரூ.5 லட்சம்-நகையை திருடினர்"அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி பரபரப்பு புகார்


வீட்டை சூறையாடிவிட்டு ரூ.5 லட்சம்-நகையை திருடினர்அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி பரபரப்பு புகார்
x

“வீட்டை சூறையாடிவிட்டு ரூ.5 லட்சம்-நகையை திருடிச் சென்றுவிட்்டனர்” என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி, போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

மதுரை


"வீட்டை சூறையாடிவிட்டு ரூ.5 லட்சம்-நகையை திருடிச் சென்றுவிட்்டனர்" என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி, போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

வீடு சூறை

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூரை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.

சில நாட்களுக்கு முன்பு கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவில் திருவிழாவில் முதல் மரியாதை யாருக்கு? என்பது தொடர்பாக பொன்னம்பலம் தரப்புக்கும், தி.மு.க. நிர்வாகி வேல்முருகன் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலில் வேல்முருகன் தரப்பினர், பொன்னம்பலம் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும், அங்கிருந்த காருக்கு தீ வைத்தது மட்டுமின்றி, இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதாகவும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக இருதரப்பினரும் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தி.மு.க. பிரமுகர் வேல்முருகன் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு புகாரில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசில் புகார்

இந்தநிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள் சத்திரப்பட்டி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் "தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டை எதிர்தரப்பினர் சூறையாடிய போது பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகைகள்,ரூ.5 லட்சம் மற்றும் பத்திரப்பதிவு ஆவணங்கள் திருடிச் சென்றுள்ளனர்" என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story