முதல்-அமைச்சர் பேசி முடித்ததும் கொட்டித்தீர்த்த மழை
முதல்-அமைச்சர் பேசி முடித்ததும் மழை கொட்டித்தீர்த்தது.
ஈரோடு
கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் நேற்று மாலை நடந்த விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி உருவ சிலையை திறந்துவைத்து முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழாதொடங்குவதற்கு முன்பே, லேசான மழை தூறல் இருந்தது. முதல்-அமைச்சர் வந்த நேரத்தில் மழை நின்று வானம் வெறித்தது.
முதல்-அமைச்சர் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போதே மீண்டும் சிறு தூறல் விழுந்தது. அவர் பேசி முடித்து கீழே இறங்கிய மறு வினாடி மழை வலுத்து கொட்டத்தொடங்கியது. 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் பொது மக்கள் ஒதுங்க இடம் இன்றி ஓடினார்கள். சாலையில் வெள்ளம் ஆறு போல் ஓடியது.
முதல்-அமைச்சர் அருகில் உள்ள அரங்குக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் 30 நிமிடங்களுக்கும் மேலாக அங்கு இருந்தார். வெளியே மழை வலுவாக பெய்து கொண்டிருந்தது.
ஆனால் முதல்-அமைச்சரின் வாகனம் அங்கிருந்து செல்லாததால் வேறு எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. போலீசாரும் வேறு வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அனைவரும் மழையில் நனையும் கட்டாயம் ஏற்பட்டது.
அதே நேரம் வழி நெடுகிலும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கூடி நின்றது குறிப்பிடத்தக்கது.