பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தும்பயன்பாட்டுக்கு வராத எரிவாயு தகன மேடை


பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தும்பயன்பாட்டுக்கு வராத எரிவாயு தகன மேடை
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போடி நகராட்சியில் எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வே்ணடும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

போடி நகராட்சியில் எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணி நடந்தது. பராமரிப்பு பணி நிறைவடைந்தும் தகன மேடை இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் மயானத்திற்கு வரும் பொதுமக்கள் உட்காருவதற்கு கூட இடம் இல்லாமல் சிரமமடைந்து வருகின்றனர். இதேபோல், நகராட்சி சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் தியான மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆனால் அந்த மண்டபம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக எரிவாயு தகன மேடை மற்றும் தியான மண்டபத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story