பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்கள் விழிப்புணர்வு பயணம்
பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்கள் விழிப்புணர்வு பயணம் தொடங்கினர்.
கன்னியாகுமரி
தென்தாமரைகுளம்:
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஷினி ராஜகுமார், கல்யாணி, ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பெண்களும் கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு இரு சக்கர வாகனத்தில் பிரசார பயணத்தை நேற்று தொடங்கினர்.
இவர்கள் பல்வேறு மாநிலங்கள் வழியாக இரு சக்கர வாகனத்தில் ஜம்மு-காஷ்மீரை சென்றடைகிறார்கள். பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரியில் பிரசார பயணத்தை நிறைவு செய்கின்றனர். மொத்தம் 15 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்யும் இவர்கள் செல்லும் வழிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர்.
Related Tags :
Next Story