அகரக்கோட்டாலம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


அகரக்கோட்டாலம்  முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

அகரக்கோட்டாலம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளத. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், புண்ணியாக வாகனம், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், மூல மந்திரம் கோ பூஜை, தன பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தெளிக்கப்பட்டது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story