அகஸ்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு


அகஸ்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
x

திருவாரூர் அருகே அகஸ்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

திருவாரூர்


திருவாரூர் அருகே பழையவலம் பகுதியில் சத்யாதாட்சி அம்பிகா, அகஸ்தீஸ்வரர் கரிய மாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடந்து வந்தது. தற்போது திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று காலை குடமுழுக்கு நடந்தது. குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 20-ந் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று வந்தது. முன்னதாக யாக சாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 6.30 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. 9 மணிக்கு மகா பூர்ணாஹீதி தீபாராதனை கடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு சிவாலய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் பழையவலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் ராஜ்திலக், செயலாளர் அசோக்குமார் மற்றும் அலுவலர் சிவபுண்ணியம் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story