திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர்கல்லூரியில் அகத்தியர் முத்தமிழ் மன்ற விழா


திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர்கல்லூரியில் அகத்தியர் முத்தமிழ் மன்ற விழா
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர்கல்லூரியில் அகத்தியர் முத்தமிழ் மன்ற விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில், அகத்தியர் முத்தமிழ் மன்ற விழா கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமையில் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் ஜான்சிராணி வரவேற்று பேசினார். விழாவில், ஓய்வுபெற்ற நாகர்கோவில் தெ.தி.இந்துக்கல்லூரி தமிழ்த்துறை தலைவரும், இணைப் பேராசிரியருமான தா.நீலகண்டபிள்ளை கலந்து கொண்டு, கதையும் கலையும் என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து அவரது தலைமையில் மனிதருக்கு மகிழ்வையும், நிம்மதியையும் கொடுப்பது அறத்தோடு வாழ்வதா? பொருளோட வாழ்வதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் தமிழிலக்கிய மாணவிகளும், பேராசிரியைகளும் கலந்து கொண்டு பேசினர். மன்ற செயலர் நன்றி கூறினார். பிற்பகலில் இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கிய மாணவியர், முத்தமிழுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். அகத்தியர் முத்தமிழ் மன்ற மாணவத்துணைச் செயலர், 2-ம் ஆண்டு தமிழிலக்கிய மாணவி செ.ரொசாரியா அனிஷா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாணவர் செயலர், 3-ம் ஆண்டு தமிழிலக்கிய மாணவி பா.ஹிருபாதேவி நன்றி கூறினார்.

இதேபோன்று, திருச்ெசந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பொருளியல்துறை சார்பாக, வினாடி வினா போட்டி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். மாணவி அ.டயானா மெர்சி வரவேற்று பேசினார். மாணவ செயலாளர் ப.செல்வராணி மன்ற அறிக்கை வாசித்தார். போட்டியை வணிக நிர்வாகவியல் துணை பேராசிரியை ரா.தெய்வ வீரலட்சுமி நடத்தினார். தலா 3 மாணவிகளை கொண்ட 4 அணிகளுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இறுதி சுற்றில் அ.டயானா மெர்சி, கா.மகாராணி மோனிஷா, அ.சக்தி ஷிவானி ஆகியோர் இடம்பெற்ற அணி முதலிடத்தை பிடித்தது. மாணவி மு.சந்தியா நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர் ஆ.ஜெயந்தி வழிகாட்டுதலின்படி பேராசிரியைகள் பா.கவிதா, பி.பால்தங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story