வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது


வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது
x

தஞ்சை வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சை வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.

வாய்க்கால்

தஞ்சை கோடியம்மன் கோவில் அருகே வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்கால் முழுவதும் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது வாய்க்கால் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

மேலும், வெயிலின் காரணமாக ஆகாயத்தாமரைகள் முழுவதும் காய்ந்தன. இதனால் பச்சை நிறத்தில் இருந்த ஆகாயத்தாமரைகள் பழுப்பு நிறத்துக்கு மாறின. வாய்க்காலை சுற்றி இருந்த செடி, கொடிகளும் முழுவதும் காய்ந்து காணப்பட்டது.

திடீர் தீ

இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் சரவணமுத்து, ரவி, பாலசுப்பிரமணியன், பாபு, பாலகுமார் மற்றும் செல்லத்துரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.வாய்க்காலில் திடீரென ஆகாயத்தாமரைகள் தீப்பிடித்து எரிந்தது அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story