முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
திருப்பூர்
காங்கயம்
காங்கயம், வக்கீல் வீதி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). முதியவரான இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த முதியவர் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story