அமராவதி ஆற்றில் மூழ்கி மூதாட்டி சாவு


அமராவதி ஆற்றில் மூழ்கி மூதாட்டி சாவு
x

அமராவதி ஆற்றில் மூழ்கி மூதாட்டி சாவு

திருப்பூர்

காங்கயம்

பல்லடம் அடுத்த கள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பாத்தாள் (வயது 62). இவர் நேற்று ஊதியூர் அருகே சங்கரண்டாம் பாளையத்தில் உள்ள ரத்தினமூர்த்தி சாமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். சாமி கும்பிட்டு விட்டு சங்கரண்டாம்பாளையம் அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினார். அப்போது எதிர்பார விதமாக திருப்பாத்தாள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

----


Next Story