ஆக்ரோஷமாக சீறிப்பாயும் கடல் - அலட்சியமாக விளையாடும் சுற்றுலா பயணிகள்


ஆக்ரோஷமாக சீறிப்பாயும் கடல் - அலட்சியமாக விளையாடும் சுற்றுலா பயணிகள்
x

சீற்றத்துடன் காணப்படும் தரங்கம்பாடி கடற்கரையில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளித்தும், புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.

மயிலாடுதுறை,

சீற்றத்துடன் காணப்படும் தரங்கம்பாடி கடற்கரையில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளித்தும், புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் தரங்கம்பாடி கடற்கரைக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தற்போது கடலில் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், தடுப்புச் சுவரை மீறி கடல் அலைகள் சத்தத்துடன் மேல் எழும்புகிறது. ஆனால், ஆபத்தை உணராமல் கடலில் சுற்றுலா பயணிகள் குளிப்பதும், பாறைகளில் மேல் ஏறி நின்று புகைப்படமும் எடுத்து வருகின்றனர்.

எச்சரிக்கை பலகையை சுற்றுலா பயணிகள் பொருட்படுத்துவதில்லை என்று போலீசார் குற்றச்சாட்டினர்.


Next Story