நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை தடை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:-

கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் மணல் குவாரியை தடை செய்யக்கோரி புத்தூர் மதகடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குமார், தொகுதி பொறுப்பாளர்கள் ஜவஹர், சிவசந்திரன், காரல் மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் காளிதாசன் வரவேற்றார். இதில் மாநில பொறுப்பாளர் காளியம்மாள் கலந்து கொண்டு பேசினார். கொள்ளிடம் ஆற்றில் குன்னம், மாதிரவேலூர் ஆகிய பகுதிகளில் மணல் எடுக்க தடை செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தொகுதி பொறுப்பாளர் சுபாஷ், மாநில பொறுப்பாளர்கள் கலியபெருமாள், காசிராம், கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story