கும்பகோணத்தில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


கும்பகோணத்தில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x

வாடகை உயர்வை திரும்பப்பெறக்கோரி கும்பகோணத்தில் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:-

வாடகை உயர்வை திரும்பப்பெறக்கோரி கும்பகோணத்தில் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாடகை உயர்வு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தரை கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளுக்கு தினசரி வாடகையை உயர்த்தி மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.

திடீரென உயர்த்தப்பட்டுள்ள வாடகை உயர்வால் தரைக்கடை சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஏ.ஐ.டி.யூ.சி. தஞ்சை மாவட்ட தெரு வியாபாரிகள் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நேற்று கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் மகாமக குளம் மேல்கரை பகுதியில் தொடங்கிய ஊர்வலம் கும்பகோணம் நால்ரோடு அருகே உள்ள மாநகராட்சி அலுவலக கட்டிடம் அருகே முடிவடைந்தது. தொடர்ந்து சாலையோர கடை வியாபாரிகள், தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு தினசரி வாடகையை உயர்த்தி அறிவித்துள்ளதை திரும்பப்பெற வேண்டும். நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் உள்ள வியாபார குழு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு இந்திய கம்யூனிஸ்டு தஞ்சை மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story