வேளாண்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வேளாண்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

வேளாண்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

தோட்டக்கலைத்துறையில் அமைச்சு பணியாளர்கள் மாறுதலில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க கோரி வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி திருவாரூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகம் முன்பு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மாதவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தம்பிதுரை முன்னிலை வகித்தார். அரசு மருந்தாளுனர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட துணைத்தலைவர் தியாகசுந்தரம், மாநில அமைப்பு செயலாளர் விஷ்வேஸ்வரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் விஜயசங்கர் நன்றி கூறினார்.


Next Story