நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 'டார்ச் லைட்' அடித்து ஆர்ப்பாட்டம்


நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் டார்ச் லைட் அடித்து ஆர்ப்பாட்டம்
x

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ‘டார்ச் லைட்’ அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வலியுறுத்தி டார்ச் லைட் அடித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, துணை தலைவர் தியாகராஜன், ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வேதாரண்யத்தில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை யாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story