தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

கரும்புக்கான ஊக்கத்தொகையை உடனே வழங்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கரும்புக்கான ஊக்கத்தொகையை உடனே வழங்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு விவசாயிகள்

குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்குட்பட்ட தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் திருப்பதி வாண்டையார், செயலாளர் கோவிந்தராஜன், பொருளாளர் அர்ச்சுனன், விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணைத்தலைவர் கக்கரை சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊக்கத்தொகை

ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் கடந்த நிதி நிலை அறிக்கையில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.195 விலை அறிவித்தார். அதற்கு இதுவரை அரசாணை வெளியிடவில்லை. தற்போது தீபாவளி பண்டிகை வருவதால் விவசாயிகள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். எனவே அறிவித்த ஊக்கத்தொகையை உடனடியாக கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மனு அளித்தனர்

ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர்கள் முத்துகிருஷ்ணன், கலியபெருமாள், துணை செயலாளர்கள் லாசர், அய்யாத்துரை, துணை பொருளாளர்கள் வேலுகோப்புலிங்கம், ராஜ்குமார், ஆலோசகர் விஜயகுமார் மற்றும் கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கரும்பு விவசாயிகள் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடமும் வழங்கினர்.


Next Story