தஞ்சை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
15 ஆண்டுகளாக புதுப்பிக்காமல் குண்டும், குழியுமாக காணப்படும் தஞ்சை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கக்கோரி பாபநாசத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
15 ஆண்டுகளாக புதுப்பிக்காமல் குண்டும், குழியுமாக காணப்படும் தஞ்சை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கக்கோரி பாபநாசத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குண்டும் குழியுமாக
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அண்ணா சிலை அருகில் குண்டும் குழியுமாக காணப்படும் தஞ்சை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை புதிய சாலையாக அமைத்து தரக்கோரி பல்வேறு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய கம்யூனிஸ்டு மாநில பொதுச் செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார்.
அப்போது தஞ்சை- கும்பகோணம் நெடுஞ்சாலை 15 ஆண்டு காலமாக புதுப்பிக்கப்படவில்லை என்றும், குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பப்பட்டது.
விபத்துகள்
மேலும் தினசரி ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் தினசரி விபத்து ஏற்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர். இதில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், அகில இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் கோவிந்தராஜன், தே.மு.தி.க. மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் தேசிங்கு ராஜன், ஆம் ஆத்மி கட்சி தஞ்சை மாவட்ட தலைவர் சபிக், தொழிற்சங்க தலைவர் சிவசங்கரவேலன், பாபநாசம் தொகுதி தலைவர் முருகானந்தம், மனிதநேய ஜனநாயக கட்சி மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் முகமது மஹரூப் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.