நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 March 2023 12:45 AM IST (Updated: 10 March 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

நுகர்வோர் வாணிபக் கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை சித்தர்காடு நவீன அரிசி ஆலை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யூ.சி. மண்டல தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பாட்டாளி தொழிற்சங்க மாநில துணை பொதுச் செயலாளர் முருகன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் ராஜ்மோகன், பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், நுகர்வோர் வாணிபக் கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும், எடை இழப்பை பணியாளர்கள் மீது சுமத்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., பாட்டாளி தொழிற்சங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யூ. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story