மணியோசை எழுப்பி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


மணியோசை எழுப்பி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 May 2023 7:15 PM GMT (Updated: 2 May 2023 7:16 PM GMT)

மணியோசை எழுப்பி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு அகில இந்திய ஓய்வூதிய நல சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மணியோசை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க துணைத் தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மதிவாணன், துணைத் தலைவர்கள் அம்பிகாபதி, ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பரிமளக்கண்ணன் வரவேற்றார். இதில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் பண்ணை சொக்கலிங்கம், ஐ.என்.டி.யூ.சி. மாநில துணைத்தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 'இ.பி.எஸ். 95' ஓய்வூதியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். அனைவருக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு வசதி வழங்க வேண்டும். மூத்த குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட ரெயில்வே கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் வழங்குவது போல தமிழக அரசும் சமூக பாதுகாப்புடன் கூடிய தனி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மணி, தட்டுகள் மூலமாக ஓசை எழுப்பி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. முடிவில் கவுரவ தலைவர் சம்பத் நன்றி கூறினார்.


Next Story